Enable Javscript for better performance
பிளஸ் 1 சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 1 சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை

    By  புதுச்சேரி,  |   Published on : 16th June 2018 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 1 சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வி இணை இயக்குநர் குப்புசாமி தெரிவித்தார்.
     இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழ் கல்வியாண்டில் புதுவை மாநிலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். பள்ளிகளில் இருக்கும் இடங்களைப் பொருத்து தகுதி, இட ஒதுக்கீடு முறையில் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
     தகுதியுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரையும் சேர்த்த பிறகே மீதமுள்ள இடங்களில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், பின்னர் தனியார் பள்ளி மாணவர்கள், இறுதியாக, புதுவை மாநில குடிமையுரிமை அல்லாத மாணவர்களுக்கு தகுதி, இடஒதுக்கீடு அடிப்படையில் இடங்கள் வழங்கப்படும்.
     பிளஸ் 1 வகுப்பில் சேர விரும்பும் அந்தந்தப் பகுதி மாணவர்கள் பள்ளிகளில் விண்ணப்பத்தைப் பெற்று நிறைவு செய்து, ஜூன் 20-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து அந்தந்த பள்ளிகளிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.
     விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஜூன் 21-ஆம் தேதி முதல் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் அரசு ஆணை, வழிகாட்டுதலின்படி அந்தந்தப் பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai