Enable Javscript for better performance
புதுவையில் டி.ஜி.பி. செயலர் உள்பட 5 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் டி.ஜி.பி. செயலர் உள்பட 5 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

    By  புதுச்சேரி,  |   Published on : 16th June 2018 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் டி.ஜி.பி. செயலர் உள்பட 5 காவல் துறை அதிகாரிகள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
     புதுவையில் மாநில காவல் துறை இயக்குநராக சுனில்குமார் கெüதம் செயல்பட்டு வந்த நிலையில், திடீரென அவர் தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக ஐ.பி.எஸ். அதிகாரி சுந்தரி நந்தா புதுவை மாநில காவல் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
     இந்த நிலையில், புதுவை காவல் துறை இயக்குநரின் செயலர் உள்பட 2 காவல் ஆய்வாளர்கள், 3 காவல் உதவி ஆய்வாளர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
     அதன்படி, டி.ஜி.பி. செயலராக இருந்து வந்த காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஓதியஞ்சாலை காவல் நிலைய அதிகாரியாகவும், அங்கு காவல் ஆய்வாளராகச் செயல்பட்டு வந்த ஜெயசங்கர் டி.ஜி.பி. தொடர்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டனர்.
     இதேபோல, காட்டேரிக்குப்பம் காவல் நிலைய அதிகாரியாக இருந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ், சிக்மா செக்யூரிட்டி - சிறப்பு அதிரடிப் படைக்கும், புதுச்சேரி வடக்குப் பகுதி போக்குவரத்து உதவி ஆய்வாளராக இருந்து வந்த முருகானந்தம் காட்டேரிக்குப்பம் காவல் நிலைய அதிகாரியாகவும், சிக்மா செக்யூரிட்டி உதவி ஆய்வாளராக இருந்து வந்த ராமமூர்த்தி, வடக்குப் பகுதி போக்குவரத்து உதவி ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
     இதற்கான உத்தரவுகளை புதுவை காவல் துறை தலைமையகக் கண்காணிப்பாளர் கொண்டா வெங்கடேஸ்வர ராவ் வெள்ளிக்கிழமை பிறப்பித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai