Enable Javscript for better performance
முதியோர், விதவை உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    முதியோர், விதவை உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்

    By  புதுச்சேரி,  |   Published on : 16th June 2018 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதியோர், விதவை உதவித் தொகை கிடைக்க முதல்வர் வே.நாரயணசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது.
     புதுவை தெற்கு மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதி திமுக நிர்வாகிகள், கிளைச் செயலர்கள், அணி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தெற்கு மாநில திமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு புதுவை தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் ஜானகிராமன் முன்னிலை வகித்தார். தொகுதி கழகச் செயலர் நடராஜன் வரவேற்றார்.
     கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நெல்லித்தோப்பு தொகுதியில் பொதுக் கூட்டம் நடத்தி, 500 ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்குவது, புதுச்சேரி மாநிலத்தில் முதியோர், கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னிகள், விதவைகள் சுமார் 30 ஆயிரம் பேர் உதவித் தொகை கோரி, விண்ணப்பித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விரைவாக உதவித் தொகை கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     நெல்லித்தோப்பு சுப்பையா சிலையில் இருந்து மீன் மார்க்கெட் வரை உள்ள சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகின்றனர்.
     மேலும், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள இந்தச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும்.
     ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நெல்லித்தோப்பு சந்தை அபிவிருத்திப் பணி, சக்தி நகர் யூ வடிவ வாய்க்கால் பணி, கஸ்துôரிபாய் பூங்காவை அமைக்கும் பணிகளை உடனே தொடங்கி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். சக்தி நகரில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக் கூடத்தை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
     நெல்லித்தோப்பு தொகுதியில் மந்தமாக நடைபெறும் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து வீடுகளுக்கு இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai