Enable Javscript for better performance
45 வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ. 74.78 லட்சம் அபராதம், வரி வசூல்- Dinamani

சுடச்சுட

    

    45 வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ. 74.78 லட்சம் அபராதம், வரி வசூல்

    By புதுச்சேரி,  |   Published on : 16th June 2018 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் 45 வணிக நிறுவனங்களிடமிருந்து அபராதம், வரித் தொகையாக ரூ. 74.78 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக புதுவை வணிக வரித் துறை ஆணையர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார்.
    இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
    மே 15-ஆம் தேதி முதல் ஜூன் 14 -ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை வணிக வரித் துறையால் வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 45 நிறுவனங்களிடமிருந்து ரூ. 74.78 லட்சம் வசூலிக்கப்பட்டது. இதில், ரூ. 51.30 லட்சம் வரித் தொகை, ரூ. 23.48 லட்சம் அபராதத் தொகை ஆகும். இவற்றில் முறையான ரசீது வழங்காத 21 வணிகர்களிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ. 9.15 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
    மேலும், 6 வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு குறைபாடுகள் கண்டறியப்பட்டதன் மூலம் 10 வணிகர்களிடமிருந்து ரூ. 7.5 லட்சம் வரி, அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது. அரசின் வருவாய் இழப்பைத் தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருள்கள், பெறும் சேவைக்கு உண்டான உரிய ரசீதுகளைக் கேட்டுப்பெற வேண்டும். 
    ரசீது வழங்காமல் இருத்தல், வரி ஏய்ப்பு சம்பந்தப்பட்ட புகார்களை வணிக வரித் துறையின் கட்செவி அஞ்சல் எண் 73977 17723 மூலமாகவோ, complaints.ctd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தெரிவிக்கலாம்.
    புகார்களை எழுத்துப்பூர்வமாகவும் அல்லது 1800 425 1717 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அந்த அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai