Enable Javscript for better performance
ஊதிய உயர்வு வழங்கக் கோரி ஜிப்மர் காவலாளிகள் வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    ஊதிய உயர்வு வழங்கக் கோரி ஜிப்மர் காவலாளிகள் வேலைநிறுத்தம்

    By DIN  |   Published on : 17th June 2018 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊதிய உயர்வு வழங்கக் கோரி, புதுச்சேரி ஜிப்மரில் காவலாளிகள் சனிக்கிழமை திடீர் வேலைநிறுத்தத்தில்
    ஈடுபட்டனர்.
    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் தனியார் காவலாளிகள் பணியாற்றி வருகின்றனர். பெண்கள், ஆண்கள் என மொத்தம் 140 பேர் கால முறையில் (ஷிப்ட்) வேலை செய்து வருகின்றனர்.
    இந்த நிலையில், சில மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட ஆண்டு சலுகைகள் எதுவும் கிடைக்காத நிலையில் ஏமாற்றமடைந்த தனியார் காவலாளிகள் 100-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனையில் காவல் பணிகள் பாதிக்கப்பட்டன.
    தகவலறிந்த ஜிப்மர் நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தக் காவலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்ற காவலாளிகள் உடனடியாகப் பணிக்குத் திரும்பினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai