Enable Javscript for better performance
ஜிப்மர் மருத்துவப் பதிவேடு துறையில் தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவப் பதிவேடு துறையில் சனிக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. இங்குள்ள வெளிப்புற சிகிச்சைப் பிரிவின் பழைய கட்டடத்தின் 2-ஆவது மாடியில் மருத்துவப் பதிவேடு துறை இயங்கி வருகிறது.
    இங்கு நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் பராமரிப்பு, திருத்தம் மேற்கொள்ளுதல், பதிவேடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
    இந்த நிலையில், சனிக்கிழமை காலை பதிவேடு துறையில் இருந்த குளிர்சாதன எந்திரம் திடீரென வெடித்து தீ
    விபத்து ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், அங்கிருந்த நோயாளிகள் பதற்றமடைந்தனர். சிலர் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
    உடனடியாக ஜிப்மரில் உள்ள தீயணைப்பு ஊழியர்கள், மின்துறை பணியாளர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மேலும் பரவாமல் இருக்க மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
    தீ விபத்து குறித்து தகவலறிந்த ஜிப்மர் மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே, பாதுகாப்பு கருதி வெளிப்புற சிகிச்சையை உடனடியாக நிறுத்தி அங்கிருந்த நோயாளிகளை உடனே வெளியேற்றினார். மேலும், தீ
    விபத்து நடந்த பதிவேடு துறையில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டன.
    பின்னர், தீ விபத்து தடுப்புப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக, ஒரு மணி நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர், புறநோயாளிகளுக்கு மீண்டும் சீட்டுகள் வழங்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது.
    தீ விபத்து குறித்து ஜிப்மர் மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே கூறியதாவது:
    ஜிப்மர் வெளிப்புற சிகிச்சைப் பிரிவின் மருத்துவ பதிவேடு துறையில் மின் கசிவு காரணமாக சிறிய அளவில்
    தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது. நோயாளிகளின் பாதுகாப்பு கருதி, சிறிது நேரம் வெளிப்புற சிகிச்சைப் பிரிவில் பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர், வழக்கம் போல பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai