Enable Javscript for better performance
தனியார் மதுபான ஆலையில் கிரண் பேடி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் மதுபான ஆலையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    கிரண் பேடி வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
    அந்த வகையில், புதுச்சேரி அருகே அய்யங்குட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுபான ஆலையில், முறைகேடான வகையில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக வந்த புகாரை அடுத்து, அவர் சனிக்கிழமை அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    முன்னதாக, சுற்றுச் சூழல் துறை, பொதுப் பணித் துறை, நீர்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்களுடன் அந்த மதுபான ஆலைக்கு அரசுப் பேருந்தில் சென்றார்.
    தனியார் மதுபான ஊழியர்களிடம் கடந்த ஆண்டு எவ்வளவு நீர் எடுக்கப்பட்டது? நிகழாண்டு இதுவரை எவ்வளவு நீர் எடுக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்த அவர், நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
    பின்னர், தொழிற்சாலைக்குள் சென்று சுற்றிப் பார்த்த அவர், அங்குள்ள கழிவுநீரைச் சுத்திகரிக்கும் மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கிரண் பேடி கூறியதாவது: நீரை முறையாகப் பயன்படுத்துவது, கழிவுநீரை முறையாகச் சுத்திகரிப்பு செய்வது தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகத்துக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன்.
    குடிநீர் என்பது ஏழை மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையாகும். மதுவைவிட குடிநீர்தான் முக்கியம். நிலத்தடி நீரைப் பாதுகாக்க இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai