Enable Javscript for better performance
புதுவையில் 15 இடங்களில் மத்திய அரசின் சாதனையை விளக்கி கூட்டம் நடத்த பாஜக முடிவு- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் 15 இடங்களில் மத்திய அரசின் சாதனையை விளக்கி கூட்டம் நடத்த பாஜக முடிவு

    By DIN  |   Published on : 17th June 2018 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் சாதனையை விளக்கி, புதுவையில் 15 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.
    புதுவை மாநில பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள கட்சியின் மாநில அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் செல்வம், தங்க.விக்ரமன், பொதுச் செயலர் ரவிந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில், மத்திய அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மக்களிடம் விளக்குதல், புதுவை பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளில் 15 இடங்களில் மத்திய அரசின் சாதனை விளக்க பிரசாரக் கூட்டத்தை நடத்த வேண்டும். சாதனையாளர்கள், அறிவுஜீவிகள், சமுதாயத்தில் முக்கிய பிரமுகர்களை அழைத்துக் கூட்டம் நடத்துதல், தலித் கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும். கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் மூலம் இரு சக்கர வாகனப் பேரணியை நடத்தி, மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கூட்டத்தில் நியமன எம்.எல்.ஏ. கே.ஜி.சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai