சுடச்சுட

  

  விமான நிலைய அலுவலகத்தில் புகுந்த பாம்பை பிடித்த காவலருக்கு பாராட்டு

  By DIN  |   Published on : 17th June 2018 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை விமான நிலைய அலுவலகத்தில் புகுந்த விஷ பாம்பைப் பிடித்து அகற்றிய காவலருக்கு டி.ஜி.பி. பாராட்டு தெரிவித்தார்.
  புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு விமானம் இயக்கப்படுகிறது. விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக விமான நிலையங்கள் ஆணையத் தலைவர் குருபிரசாத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் லாஸ்பேட்டை விமான நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்தில் புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வினி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, சுற்றுலாத் துறைச் செயலர் பார்த்திபன், புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் தேஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  அப்போது, அந்த அறையில் இருந்த நாற்காலிகளை ஊழியர்கள் நகர்த்தினர், அங்கு விஷ பாம்பு ஒன்று இருந்தது. இதைக் கண்ட அதிகாரிகள் அறையைவிட்டு வெளியேறினர். அங்கிருந்த பல்நோக்கு ஊழியர் உமா பாம்பைப் பிடிக்க முயன்றும் முடியவில்லை.
  இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து ஐஆர்பிஎன் காவலர் தியாகு அந்த பாம்பைப் பிடித்து அகற்றினார். அதிகாரிகள் அவரை பாராட்டினர். அந்தப் பாம்பு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
  தகவலறிந்த புதுவை டி.ஜி.பி. சுனில்குமார் கெளதம் ஐஆர்பிஎன் காவலர் தியாகுவை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ், ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினார். அப்போது, புதுவை ஐஆர்பிஎன் உதவி கமாண்டன்ட் ராஜேஷ் உடனிருந்தார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai