Enable Javscript for better performance
வீர தீர செயல் புரிந்த குழந்தைகள் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    வீர தீர செயல் புரிந்த குழந்தைகள் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 17th June 2018 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வீர தீர செயல் புரிந்த குழந்தைகள் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் யஷ்வந்தையா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 1.7.2017 முதல் 30.6.2018 வரை வீர தீரச் செயல், பாராட்டுத் தக்க சேவைகள் புரிந்த குழந்தைகளுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான வயது வரம்பு 6 முதல் 18 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 3.9.2018. செப்டம்பர் 3-ஆம் தேதிக்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai