Enable Javscript for better performance
அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்த இருவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்த இருவர் மீது வழக்கு

    By  புதுச்சேரி,  |   Published on : 18th June 2018 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்த இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
     புதுச்சேரியில் விளம்பரப் பதாகை, கட் அவுட் வைக்க தடை சட்டம் அமலில் உள்ளது. எனினும், அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள், கட் அவுட்கள் வைக்கப்படுகின்றன.
     இந்த நிலையில், புதுச்சேரி அண்ணாசாலை கருவூலத் துறை அலுவலகம் சாலை சந்திப்பில் கருவூலத் துறை சாலை - படேல் சாலை சந்திப்பில் விஜய் மக்கள் இயக்கத் திறப்பு விழா விளம்பரப் பதாகை வைக்கப்பட்டது.
     உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதால், இதை அகற்ற போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால், பதாகையை அகற்றாததால், அந்த இயக்கத்தைச் சேர்ந்த டிவி நகரைச் சேர்ந்த சிவா, ராமு ஆகிய இருவர் மீதும் முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai