Enable Javscript for better performance
காலாவதியான மருந்துகளை கால்வாயில் வீசியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காலாவதியான மருந்துகளை கால்வாயில் வீசியவர் கைது

    By  புதுச்சேரி,  |   Published on : 18th June 2018 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் காலாவதியான மருந்துகள், ஊசி உள்ளிட்ட பொருள்களை சாலையோரக் கால்வாயில் வீசிச் சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
     புதுச்சேரியில் மருத்துவக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், ஊசி உள்ளிட்டவை இரவு நேரங்களில் சாலையோரம், நீர்நிலைகள், காலிமனைகள் போன்ற இடங்களில் கொட்டப்படுகின்றன. இதனால், சுற்றுப்புற பகுதிகளில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
     இந்த நிலையில், புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம் கடலூர் பிரதான சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே சனிக்கிழமை காரில் வந்த ஒருவர் 3 அட்டை பெட்டிகளை எடுத்து அங்குள்ள கால்வாயில் வீசினார்.
     சந்தேகமடைந்த அந்தப் பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் அந்த மூட்டைகளைப் பிரித்து பார்த்த போது, அவற்றில் காலாவதியான மருந்து, மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் உள்ளிட்ட பொருள்கள் இருந்தன.
     இதையடுத்து, அந்த நபரை அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிருமாம்பாக்கம் காவல் உதவி துணை ஆய்வாளர் ராஜமாணிக்கத்திடம் பிடித்து ஒப்படைத்தனர். போலீஸார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
     விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் (52) என்பதும், அங்குள்ள மருந்துக் கடையில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.
     புதுச்சேரிக்கு எலெக்ட்ரிக்கல் பொருள்களை வாங்க வந்தபோது, மருந்துக் கடையில் இருந்த காலாவதி மருந்து, மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட பொருள்களை எடுத்து வந்து சாலையோரத்தில் கொட்டியதும் தெரிய வந்தது.
     இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai