காவல் துறை சார்பில் சர்வதேச யோகா தினம்
By புதுச்சேரி, | Published on : 18th June 2018 08:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுவை காவல் துறை கோரிமேடு ஆயுதப்படை காவல் மைதானத்தில் யோகா தின நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுவை காவல் துறை இயக்குநர் சுனில்குமார் கெளதம் கலந்து கொண்டு யோகாவின் சிறப்புகள், பயன்கள் குறித்தும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் நாள்தோறும் யோகா பயற்சி மேற்கொள்வது நல்லது என்றும் எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால், காவல் கண்காணிப்பாளர் ரட்சனாசிங், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தலைமைக் காவலர் நாராயணசாமி யோகா பயிற்சிகளை அளித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை காவலர் பயிற்சிப் பள்ளி காவல் கண்காணிப்பாளர் கொண்டா வெங்கடேஸ்வர ராவ் செய்திருந்தார்.