Enable Javscript for better performance
தோட்டத்தில் புகுந்து சூறை: கும்பல் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தோட்டத்தில் புகுந்து சூறை: கும்பல் மீது வழக்கு

    By  புதுச்சேரி,  |   Published on : 18th June 2018 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் தோட்டத்துக்குள் புகுந்து சூறையாடிய கும்பல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
     புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் அரவிந்தர் ஆசிரமத்துக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தை வசந்தகுமார் (73) என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத கும்பல் தோட்டத்துக்குள் புகுந்து மரக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தோட்டத்தை சூறையாடியது.
     ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இதைக் கண்ட வசந்தகுமார் இதுகுறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் உதவி துணை ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai