Enable Javscript for better performance
புதுவை பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் 577 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    புதுவை பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் 577 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி

    By  புதுச்சேரி,  |   Published on : 18th June 2018 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் உள்ள பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில், 577 ஆசிரியர்களை நியமிக்க புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளித்தார்.
     கடந்த வாரம் 26 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி புதுவை அரசு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பியிருந்தது. அந்த 26 கோப்புகளுக்கும் ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
     கோப்புகள் விவரம்: புதுச்சேரியில் பள்ளிக் கல்வியில் 577 ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அனுமதி கோரும் கோப்புக்கு ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளித்தார்.
     அதன்படி, பல்வேறு பாட ஆசிரியர்கள், உடல் கல்வி ஆசிரியர்கள், நூலகர், ஓவியர் ஆசிரியர்கள் நிரப்பப்பட உள்ளனர்.
     பேருந்துக் கட்டண உயர்வு: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது போல, புதுவையிலும் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கோப்புக்கும் ஆளுநர் அனுமதி அளித்தார்.
     புதுச்சேரி மாவட்ட நீதிபதி செந்தில்குமார் பணியிட மாற்றமாக தமிழ்நாடு நீதித் துறைக்கு மாற்ற அனுமதி கோரும் கோப்புக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai