ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த வெளி மாநில இளைஞர் சாவு
By புதுச்சேரி | Published on : 18th June 2018 08:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரி ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த வெளி மாநில இளைஞர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜய் நேடல் (23) வேலை செய்து வந்தார். இந்த நிலையில், திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே, ஊருக்குச் செல்வதற்காக முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டியில் இருக்கை கிடைக்கும் என்பதற்காக அவர் புதுச்சேரி வந்தார்.
அவரை வழியனுப்பி வைப்பதற்காக நிறுவன மேற்பார்வையாளர் வினோத் (23) உடன் வந்திருந்தார். சனிக்கிழமை மாலை அஜய்நேடல் ரயில் நிலைய நடைமேடையில் ரயிலுக்காகக் காத்திருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். உடன் வந்த வினோத் அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஓதியஞ்சாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.