Enable Javscript for better performance
ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸாருக்கு முதல்வர் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸாருக்கு முதல்வர் வேண்டுகோள்

    By  புதுச்சேரி  |   Published on : 18th June 2018 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.
     நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க புதுதில்லிக்கு சென்றுள்ள முதல்வர் நாராயணசாமி தனது கட்செவி அஞ்சல் செய்தியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய பதிவின் விவரம்:
     அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் பிறந்த நாள் விழா ஜூன் 19-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதைச் சிறப்பாக கொண்டாடுவது நமது கடமையாகும்.
     எனவே, ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவை கோயில்களில் பூஜை செய்தும், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாட வேண்டும்.
     புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக அமைச்சர்கள், பேரவைத் தலைவர், பேரவை துணைத் தலைவர், எம்.எல்.ஏ.க்கள், பொறுப்பாளர்கள், மாவட்ட, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ராகுல் காந்தி பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என கட்செவி அஞ்சல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai