Enable Javscript for better performance
300 பவுன் திருட்டு சம்பவம்: துப்பு துலங்காமல் போலீஸார் திணறல்- Dinamani

சுடச்சுட

    

    300 பவுன் திருட்டு சம்பவம்: துப்பு துலங்காமல் போலீஸார் திணறல்

    By  புதுச்சேரி  |   Published on : 18th June 2018 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் 300 பவுன் தங்க நகைகள் திருடுபோன சம்பவத்தில் 15 நாள்களாகியும் துப்பு துலக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
     புதுச்சேரி முத்தியால்பேட்டை புனித ரொசாரியோ வீதியைச் சேர்ந்தவர் சரவணபாபு. கடந்த 1-ஆம் தேதி இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 300 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
     இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
     இதனிடையே, புதுவை காவல் துறை இயக்குநர் உத்தரவின்பேரில், எதிரிகளைப் பிடிக்க சிறப்பு அதிரடிப் படையினர் களத்தில் இறக்கப்பட்டனர்.
     காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான தடயங்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
     கிட்டதட்ட 15 நாள்களுக்கு மேல் ஆகியும் திருட்டுச் சம்பவத்தில் எதிரிகளைப் பிடிப்பதில் சிறு முன்னேற்றமும் இல்லை எனத் தெரிகிறது. சந்தேகப்படும்படியாக உள்ள நபர்களைப் பிடிக்க போலீஸார் தமிழகப் பகுதிகளுக்கு விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, போலீஸார் இந்த வழக்கில் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கு மட்டுமன்றி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற 20-க்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய எதிரிகளும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai