Enable Javscript for better performance
இன்றும், நாளையும் கள், சாராயக் கடைகள் ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள கள் மற்றும் சாராயக் கடைகளுக்கான ஆன்லைன் ஏலம் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஜூன் 19, 20) நடைபெறவுள்ளது.
    புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள கள் மற்றும் சாராயக் கடைகள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் ஏலம் விடப்படுகிறது. ஒரு குத்தகை ஆண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி முடிவடையும்.
    மூன்று குத்தகை ஆண்டை கொண்டது ஒரு தொகுப்பு ஆண்டாகும். ஒரு தொகுப்பு ஆண்டின் முதல் ஆண்டில் அனைத்து கள் மற்றும் சாராயக் கடைகளும் பொது ஏலத்தில் கொண்டு வரப்படும். 
    முதல் ஆண்டு குத்தகை எடுக்கப்படும் கடைகளுக்கு அடுத்த இரண்டு குத்தகை ஆண்டுகளுக்கு முந்தைய ஆண்டின் கிஸ்தி தொகையில் 5 சதவீதம் உயர்த்தப்பட்ட கிஸ்தி குத்தகைக்கு புதுப்பித்துத் தரப்படும்.
    அந்த வகையில் 2018-19-ஆம் குத்தகை ஆண்டானது, 2018-2021 தொகுப்பு ஆண்டின் முதல் குத்தகை ஆண்டு என்பதால் புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து கள் மற்றும் சாராயக் கடைகளுக்கு செவ்வாய், புதன்கிழமைகளில் (ஜூன் 19, 20) ஏலம் நடைபெறவுள்ளது. புதுவை பகுதியில் மொத்தம் 86 சாராயக் கடைகளும், 63 கள்ளுக் கடைகளும் ஏலம் விடப்படுகிறது.
    அதேபோல, காரைக்கால் பகுதியில் 25 சாராயக் கடைகளும், 26 கள்ளுக் கடைகளும் ஏலம் விடப்படுகிறது. இந்த ஆண்டு ஏலம், சென்ற ஆண்டு குத்தகை தொகையில் 5 சதவீதம் உயர்த்தப்பட்ட விலையில் விடப்படுகிறது. 
    கடந்தாண்டு சாராயம் மற்றும் கள்ளுக்கடை ஏலத்தின் மூலம் ரூ.90 கோடி வருவாய் கிடைத்தது. ஆனால், இந்தாண்டு ரூ.100 கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இதுவரை www.auctionindia.com என்ற தனியார் வலைதளத்தில் ஏலம் நடைபெற்று வந்தது. ஆனால், இந்த குத்தகை ஆண்டின் ஏலம் அரசு நிறுவனமான நிக் 
    (NIC) உருவாக்கியுள்ள www.calalauction.puducherry.gov.in என்ற வலைதளத்தில் நடைபெறுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai