Enable Javscript for better performance
இன்று முதல் பிளஸ்-1 விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்- Dinamani

சுடச்சுட

    

    இன்று முதல் பிளஸ்-1 விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்

    By புதுச்சேரி,  |   Published on : 19th June 2018 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 1 விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) முதல் மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்யலாம் என்று புதுவை பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி தெரிவித்தார்.
    இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
    2018-ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ்-1) பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்துக்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling என்ற தலைப்பினை Click செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 
    இந்த விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து, இரு நகல்கள் எடுத்து புதன்கிழமை (ஜூன் 20) முதல் 22-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் புதுவை இணை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை இணை இயக்குநர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai