Enable Javscript for better performance
நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி தர இழுத்தடிப்பு: "தில்லியில் புதுவை முதல்வர் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி தர இழுத்தடிப்பு: "தில்லியில் புதுவை முதல்வர் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்'

    By  புதுச்சேரி  |   Published on : 19th June 2018 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை அரசின் நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி தர மத்திய அரசு இழுத்தடித்து வரும் நிலையில், முதல்வர் வே.நாராயணசாமி புதுதில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என்று அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் வலியுறுத்தினார்.
     இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
     மத்திய திட்டக் குழு கலைக்கப்பட்டு நீதி ஆயோக் அமைக்கப்பட்ட பின்னர் இந்தியாவின் எந்த மாநிலத்துக்கும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கூடாது என கொள்கை முடிவு அறிவிக்கப்பட்டது.
     புதுவையில் முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையில் உள்ள மோதல் போக்கு சம்பந்தமாக மாநில அந்தஸ்து கேட்பதை தவிர்த்து, வழங்க முடியாத சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டிருப்பது சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையாகும்.
     வெளிநாட்டு அச்சுறுத்தல், தீவிரவாதிகள் அச்சுறுத்தல், இயற்கை சீற்றங்களால் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை, பூலோக ரீதியில் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை போன்ற மாநிலங்களுக்குத்தான் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.
     தற்போது அற்ப அரசியல் காரணங்களுக்காக சிறப்பு மாநில அந்தஸ்து கேட்கப்படுகிறது.
     மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை எதிர்த்து செயல்படும் ஆளுநரின் செயல்பாட்டை அதிமுக எதிர்க்கிறது. 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் பேரவைத் தலைவரின் நடவடிக்கைகளுக்கு அதிமுக துணை நிற்கும். நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் தராமல் புதுவைக்கு தலைக்குனிவையும், களங்கத்தையும் மத்திய உள்துறை ஏற்படுத்தியுள்ளது.
     இதற்குக் காரணமான புதுவை தலைமைச் செயலர், நிதி செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செயற்கையான நிதித் தட்டுப்பாட்டை காரணம் காட்டி புதுவை அரசை முடக்க மத்திய அரசு நினைக்கிறது.
     நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி பெற தில்லிக்குச் சென்று முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரதம் இருக்கலாம். ஆளுநர் அலுவலகத்தில் தர்னா போராட்டம் நடத்தலாம். அதனை ஏன் செய்யவில்லை என்றார் அவர்.
     பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் ஆ.பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai