Enable Javscript for better performance
பிளஸ்-1 சேர்க்கைக்கான அட்டவணை வெளியீடு: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 22-இல் கலந்தாய்வு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ்-1 சேர்க்கைக்கான அட்டவணை வெளியீடு: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 22-இல் கலந்தாய்வு தொடக்கம்

    By  புதுச்சேரி,  |   Published on : 19th June 2018 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 1 மாணவர்சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 22-இல் கலந்தாய்வு தொடங்கப்படவுள்ளது.
     இது குறித்து புதுவை பள்ளி கல்வி இணை இயக்குநர் குப்புசாமி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
     2018-19-ஆம் கல்வி ஆண்டில் புதுச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்புக்கான பள்ளி அளவிலான சேர்க்கை பின்வரும் அட்டவணைப்படி அந்தந்த பள்ளிகளில் நடைபெறவுள்ளது.
     மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜூன் 20-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 21-ஆம் தேதி 10-ஆம் வகுப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் தகுதி பட்டியல் (ஙங்ழ்ண்ற் கண்ள்ற்), நேர்க்காணலுக்கான தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகையில் மாலை 3 மணி அளவில் ஒட்டப்படும்.
     ஜூன் 22, 23, 25-ஆம் தேதிகளில் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு முறையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அந்தந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இடம் வழங்கப்படும். ஒவ்வொரு நாள்கள் முடியும்போது மீதம் உள்ள இடங்கள் ஒதுக்கீட்டு வாரியாக அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்.
     ஜூன் 26-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தகுதி பட்டியல், நேர்க்காணலுக்கான தேதி மற்றும் நேரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் வழங்கிய பின் மீதமுள்ள இடங்கள் அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகையில் மாலை 3 மணி அளவில் ஒட்டப்படும்.
     ஜூன் 27-ஆம் தேதி மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு முறையில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அந்தந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இடம் வழங்கப்படும்.
     27-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் 10ம் வகுப்பில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தகுதி பட்டியல், நேர்க்காணலுக்கான தேதி மற்றும் நேரம் ஒட்டப்படும்.
     ஜூன் 28-ஆம் தேதி மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு முறையில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அந்தந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இடம் வழங்கப்படும். ஜூன் 29-ஆம் தேதி 11-ஆவது வகுப்புகள் தொடங்கும்.
     மாணவ, மாணவிகள் தங்களுக்குரிய தேதி மற்றும் நேரத்தில் உரிய ஆவணங்களுடன் (மதிப்பெண் பட்டியல் நகல், மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடியுரிமை சான்றிதழ்) நேர்க்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
     தவறும் பட்சத்தில் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கு உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்படுகிறது. மாணவ, மாணவியர்கள் பெற்றோருடன் இவ்வட்டவணைப்படி கலந்தாய்வுக்கு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai