Enable Javscript for better performance
முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 19th June 2018 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு உறுதிமொழியை அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை ஏற்றனர்.
     உலக அளவில் 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை கடந்த 1955-ஆம் ஆண்டு 542 மில்லியனாக இருந்தது. இது 2025-ஆம் ஆண்டில் 1.2 பில்லியனாக, அதாவது இரு மடங்காக உயரப்போகிறது. சுமார் 4 முதல் 6 சதவீதம் முதியோருக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
     முதியோர்களை மரியாதையுடன் நடத்த 2006-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதியை, உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதையடுத்து, ஆண்டுதோறும் ஜூன் 15-ஆம் தேதி முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
     இதையொட்டி, புதுவை தலைமைச் செயலகத்தில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
     தலைமைச் செயலர் அஸ்வனி குமார் ஆங்கிலத்திலும், அரசுச் செயலர் சுந்தரவடிவேலு தமிழிலும் முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தின உறுதிமொழியை வாசித்தனர்.
     அதனை அரசுச் செயலர்கள் பார்த்திபன், மணிகண்டன், ஸ்ரன், பிரசாந்த் குமார் பாண்டா, சட்டச் செயலர் ஜூலியட் புஷ்பா மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் ஏற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai