Enable Javscript for better performance
முத்தியால்பேட்டையில் சாராயக் கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்யக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    முத்தியால்பேட்டையில் சாராயக் கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்யக் கோரிக்கை

    By  புதுச்சேரி,  |   Published on : 19th June 2018 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்தியால்பேட்டையில் சாராயக் கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று துணைநிலை ஆளுநரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
     இது குறித்து ஆளுநர் கிரண் பேடியிடம், புதுவை முத்தியால்பேட்டை எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் திங்கள்கிழமை அளித்த மனு:
     மத்திய அரசின் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் முத்தியால்பேட்டை தொகுதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. பொலிவுறு திட்டம் அபிவிருத்தி திட்டத்தின்படி தொகுதியில் சாராயக் கடைகள் அகற்றப்பட வேண்டும். இதனால் இத்தொகுதியில் இருந்த 2 சாராயக் கடைகளுக்கு மறு ஏலம் விடப்படக்கூடாது என முடிவு செய்து, ஏலத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுஅரசிதழிலும் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
     இந்த நிலையில் புதுச்சேரியில் நடத்தப்பட்டு வரும் 86 சாராயக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) ஏலம் விட கலால்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் ஏற்கெனவே விலக்கு அளிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்ட முத்தியால்பேட்டையில் உள்ள 2 சாராயக் கடைகளுக்கும் மீண்டும் ஏலம் விட முடிவெடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது எனக்கும், தொகுதி மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
     பொதுவாக சாராயம், கள்ளுக் கடைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில்தான் நடத்தப்பட வேண்டும். ஆனால், முத்தியால்பேட்டை நகரப் பகுதியில் அமைந்துள்ளது.
     சாராயக் கடைகளினால் மத்திய அரசின் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்ட வளர்ச்சியும் கிடைக்காமல் போய்விடுமோ? என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே, ஆளுநர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஏற்கெனவே திட்டமிட்டபடி முத்தியால் பேட்டையில் உள்ள 2 சாராயக் கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai