அரியாங்குப்பத்தில் திமுக பொதுக்கூட்டம்
By DIN | Published on : 20th June 2018 10:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுவை தெற்கு மாநிலத்துக்கு உள்பட்ட அரியாங்குப்பம் தொகுதி திமுக பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
திமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தொகுதிச் செயலாளர் சீத்தாராமன் தலைமை வகித்தார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், வேலன், பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்குமார், மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலிவரதன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் மதிவாணன், சுப்புராயன், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக கொள்கை பரப்பு செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நல உதவிகளை வழங்கினர்.
கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஆர்.வீ.ஜானகிராமன், மாநில கலை, இலக்கிய பகுத்தறிவு பிரிவு செயலாளர் சங்கர் (எ) சிவசங்கரன், தொகுதி அவைத் தலைவர் தியாகராஜன், துணைச் செயலாளர் அஜீஸ்பாஷா, முன்னாள் எம்.பி, சி.பி. திருநாவுக்கரசு, அவைத் தலைவர் சீத்தா.
வேதநாயகம், மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண். குமாரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில் மாநில பிரதிநிதி தினகரராசு நன்றி கூறினார்.