Enable Javscript for better performance
அறிவியல் படைப்புத் திறன் போட்டி: 18 அரசுப் பள்ளிகளுக்கு பரிசு- Dinamani

சுடச்சுட

    

    அறிவியல் படைப்புத் திறன் போட்டி: 18 அரசுப் பள்ளிகளுக்கு பரிசு

    By DIN  |   Published on : 20th June 2018 10:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச அறிவியல் படைப்புத் திறன் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 18 அரசுப் பள்ளிகளுக்கு பாரீஸ் பல்கலைக்கழகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
    புதுச்சேரி அறிவியல்  இயக்கமும், பிரான்ஸ் நாட்டு பாரீஸ் பல்கலைக்கழகம்,  புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை,  பள்ளிக் கல்வித்துறை ஆகியவை சார்பில் 12- வது ஆண்டாக அறிவியல் உருவாக்குவோம் என்ற சர்வதேச அறிவியல் படைப்புத் திறன் போட்டி அரசுப் பள்ளிகளுக்கு நடத்தப்பட்டது.
    புதுவை கல்வித்துறை வளாக  கருத்தரங்க கூடத்தில் 12 ஆய்வுத் திட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் கூடியிருந்தனர்.  காணொலிக் காட்சி மூலம் பிரான்ஸ் பல்கலைக்கழகத்துடன் உரையாடினர். 
    நிகழ்ச்சியை புதுவை அறிவியல் இயக்க பொதுச்செயலர் ஹேமாவதி ஒருங்கிணைத்தார்.
    பிரான்ஸிலிருந்து நேரடியாக பரிசுகள் அறிவிக்கப்பட்டன.  முதல் பரிசை பன்னித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளி வென்றது.  தண்ணீர் மேலாண்மையும் தண்ணீர் சேமிப்பையும்,  கடலில் நீர் கலப்பதிலிருந்து சேகரிப்பு தொடர்பாக இத்திட்டத்தை தயாரித்திருந்தனர்.  
    ஆசிரியர்கள் குருநாதன், தமிழ்வேந்தன் வழிகாட்டுதலின்படி மாணவர்கள், குழுத் தலைவர் வல்லாத்தான்,  முத்துவேல், சூர்யா, பிரதீஷ் செல்வா ஆகிய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் இத்திட்டத்தை தயாரித்திருந்தனர். முதலாவதாக இடம் பிடித்து 
    ரூ. 18 ஆயிரம் பரிசும் வென்றனர். 
    2-ஆவது இடத்துக்கு 3 திட்டங்கள் தேர்வு பெற்றன.  சவேரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி,  முதலியார்பேட்டை அர்ச்சன சுப்புராய நாயக்கர் பெண்கள் நடுநிலைப் பள்ளி,  அபிஷேகப்பாக்கம் சேத்திலால் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகியவை  தலா ரூ. 6 ஆயிரம் பரிசுத் தொகையை பெற்றன.
    இந்நிகழ்வில் கல்வித் துறை மாநில பயிற்சி மைய சிறப்பு அலுவலர் வெற்றிவேல்,  புதுச்சேரி அறிவியல் இயக்கத் தலைவர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai