Enable Javscript for better performance
ஈஷா சார்பில் நாளை யோகா தின நிகழ்ச்சிகள்: ஆளுநர், முதல்வர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஈஷா சார்பில் நாளை யோகா தின நிகழ்ச்சிகள்: ஆளுநர், முதல்வர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 20th June 2018 10:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈஷா அறக்கட்டளை சார்பில் புதுச்சேரியில் ராஜ் நிவாஸ்,  கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை (ஜூன் 21) யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.  
    இதில், துணைநிலை ஆளுநர் கிரண் பேடி,  முதல்வர் வே.நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
    4-ஆவது சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி  புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஈஷா அறக்கட்டளை கொண்டாடுகிறது. குறிப்பாக,  புதுச்சேரி கடற்கரையில் காலை 7 முதல் 8 மணி வரை நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் முதல்வர் வே.நாராயணசாமி பங்கேற்கிறார்.  
    இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஈஷா சார்பில் "உப-யோகா' எனப்படும் சக்தி வாய்ந்த யோகா இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட உள்ளது.  அதேபோல,  ஆளுநர் மாளிகை  முன் காலை 6 முதல் 7 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர்  கிரண் பேடி பங்கேற்கிறார்.
    அங்கு 100 மாணவர்களுக்கு "உப-யோகா' கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. 
     சிறைக் கைதிகளுக்கு யோகா:புதுச்சேரி சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கும் ஈஷா சார்பில் யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. மேலும், லாஸ்பேட்டையில் உள்ள நாவலர் பள்ளி,  வெங்கடசுப்பா ரெட்டியார் பள்ளி,  கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை, புதுச்சேரி சிஐஐ,  டொயோட்டா நிறுவனம்,  ஸ்டாண்டர்போர்ட் பள்ளி,  வெக்டர் கண்ட்ரோல் அண்ட் ரிசர்ச் சென்டர் உள்ளிட்ட இடங்களில் இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. 
     இந்த "உப-யோகா'வை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.  மூட்டுகள், தசைகள் வலுப்பெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai