Enable Javscript for better performance
கொலை வழக்குக்கு பயந்து ரெளடி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் கொலை வழக்குக்கு பயந்து ரெளடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     புதுச்சேரி வினோபா நகரைச் சேர்ந்தவர் ராகுல் (எ)மணிகண்டன்(26).  இவருக்கு தேவி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.   ரெளடியான மணிகண்டன் மீது 2010-ஆம் ஆண்டில் திலாசுப்பேட்டையில் நடந்த நொண்டி ஆறுமுகம்,  சசி மற்றும் காரைக்கால் ராமு ஆகியோரது கொலை வழக்கு உள்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் குருமாம்பேட் குடியிருப்பு பகுதி,  9-ஆவது குறுக்குத் தெருவில் வாடகைக்கு குடியேறிய மணிகண்டன், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சில நாள்களாக வேலைக்குச் சென்று வந்தார்.  இதனிடையே நேற்று முன்தினம் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  உதவி ஆய்வாளர் இனியன் தலைமையிலான போலீஸார், மணிகண்டனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முதல் கட்ட விசாரணையில் ரெளடி மணிகண்டன் மீதான ஒரு கொலை வழக்கில்  புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் அது தனக்கு எதிராக வருமோ என்ற அச்சத்தில் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. 
     மேலும், மணிகண்டன் அவரது மனைவி இடையே தகராறு இருந்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
     தொடர்ந்து ரெளடி மணிகண்டன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai