Enable Javscript for better performance
சுருக்கு வலை பயன்படுத்துவோருக்கு அரசு மானியம் நிறுத்தப்படும்: மீன் வளத்துறை- Dinamani

சுடச்சுட

    

    சுருக்கு வலை பயன்படுத்துவோருக்கு அரசு மானியம் நிறுத்தப்படும்: மீன் வளத்துறை

    By DIN  |   Published on : 20th June 2018 10:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் சுருக்கு வலை பயன்படுத்துவோருக்கு அரசு மானியம் நிறுத்தப்படும் என்று மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    இதுகுறித்து புதுவை அரசு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
    புதுவை பிராந்தியத்தைச் சார்ந்த மீனவர்கள் தொடர்ந்து சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருவது தெரிய வருகிறது.  மீன் வளத்தை பெருக்கும் வகையிலும், மீனவர் நலத்தை பேணும் பொருட்டும் சுருக்கு வலை பயன்பாடு தடைசெய்யப்பட்டது.
    பெரும்பாலான மீனவர்கள் சுருக்கு வலை பயன்பாட்டை தவிர்த்த நிலையில், சுருக்கு வலையை பயன்படுத்துவோர் சிறு அளவில் உள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வருகிறது.  
    சுருக்கு வலை ஒரு தடை செய்யப்பட்டபொருளாகும்.  
    அதனைத் தொடர்ந்து பயன்படுத்துதல் குற்றமாகும்.
    இந்த அறிவிப்பை மீறி மீன் பிடிக்க பயன்படுத்தப்படும் சுருக்கு வலைகள் பறிமுதல் செய்யப்படும்.  அதுமட்டுமன்றி அவர்களுக்கு அரசால் வழங்கப்பட்டு வரும் மானியம் மற்றும் உதவித்தொகைகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 
    மீன்களின் அழிவிற்கு வழிவகுக்கும் சுருக்கு வலை பயன்பாட்டை கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai