Enable Javscript for better performance
செல்லிடப்பேசி கடையை உடைத்து ரூ.60 ஆயிரம் பொருள்கள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    செல்லிடப்பேசி கடையை உடைத்து  ரூ.60 ஆயிரம் பொருள்கள் திருட்டு

    By DIN  |   Published on : 20th June 2018 10:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அருகே செல்லிடப்பேசி கடையை உடைத்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
     புதுவை மாநிலம், வில்லியனூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை நடுத் தெருவைச் சேர்ந்தவர் முகமது யாகூப் (55). இவர், வில்லியனூர் மூலக்கடையில் செல்லிடப்பேசி கடை வைத்துள்ளார். திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை செல்லிடப்பேசி கடை திறந்து கிடப்பதாக பக்கத்து கடைக்காரர்,  முகமது யாகூப்புக்கு தகவல் தெரிவித்தார்.  இதையடுத்து அவர் கடைக்குச் சென்று பார்த்தபோது,  கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.   கடையில் இருந்த செல்லிடப்பேசிகள்,  சார்ஜர்கள்,  செல்லிடப்பேசி உபகரணங்கள் மற்றும் பணப் பெட்டியில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது.  இதன் மொத்த மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.  இது குறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai