Enable Javscript for better performance
நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    நீட் தேர்வில் புதுவை மாநில அளவில் முதல் இடமும், ஜிப்மர் தேர்வில் இரண்டாம் இடமும் பெற்ற  மாணவருக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
    புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் (எ) ரமணன் நீட் தேர்வில் 720-க்கு 552 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதல் இடத்தையும்,ஜிப்மர்  மருத்துவ நுழைவுத் தேர்வில் புதுவை மாநில அளவில் பொதுப் பிரிவில் 99.56 சதவீதம் மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றார்.
    மேலும்,  பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் 175 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று புதுவை மாநிலத்துக்கு பெருமை சேர்த்த மாணவருக்கு முதலியார்பேட்டை  விவேகானந்தர் பயிற்சி மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.   
    புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச் சங்கம் சார்பில் அதன் தலைவர் மு.நாராயணசாமி,  பொருளாளர் விசிசி. நாகராஜ்,  ஆகியோர் பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.
    நிகழ்ச்சியில்,  பெற்றோர் மற்றும் பாரதிதாசன் நகர் நலவாழ்வு சங்கத் தலைவர் குப்புசாமி, மாணவரின் பெற்றோரான பாலாஜி-முத்துலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai