Enable Javscript for better performance
புதுச்சேரியில் அதிமுக பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக்கூட்டம் திங்கள்கிழமை  மாலை நடைபெற்றது.
    புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் பேசியதாவது:  
    காவிரி பிரச்னையில் திமுக தொடர்ந்து துரோகம் செய்தது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இப்பிரச்னைக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.  அவர் தொடுத்த வழக்கில் தான் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம்,  காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
    மத்திய அரசோடு, புதுவை காங்கிரஸ் அரசு இணக்கத்தை ஏற்படுத்தாமல் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.  இதனால் புதுவையின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படு
    கிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai