Enable Javscript for better performance
முத்தியால்பேட்டையில் கள், சாராயக் கடைகளுக்கு  ஏலம் நடத்த ஆளுநர் தடை- Dinamani

சுடச்சுட

    

    முத்தியால்பேட்டையில் கள், சாராயக் கடைகளுக்கு  ஏலம் நடத்த ஆளுநர் தடை

    By DIN  |   Published on : 20th June 2018 10:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, புதுச்சேரி முத்தியால்பேட்டையில் கள்,  சாராயக் கடைகள் ஏலம் நடத்த ஆளுநர் கிரண் பேடி தடை விதித்தார்.
    புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள கள் மற்றும் சாராயக் கடைகள் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஏலம் விடப்படும். 
    ஒரு குத்தகை ஆண்டு என்பது ஆண்டுதோறும் ஜூலை  1-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி முடிவடையும்.
    மூன்று குத்தகை ஆண்டை கொண்டது ஒரு தொகுப்பு ஆண்டாகும்.  ஒரு தொகுப்பு ஆண்டின் முதல் ஆண்டில் அனைத்து கள் மற்றும் சாராயக் கடைகள்  பொது ஏலத்தில் கொண்டு வரப்படும்.
    முதல் ஆண்டு குத்தகை எடுத்த கடைகளுக்கு அடுத்த இரண்டு குத்தகை ஆண்டுகளுக்கு முந்தைய ஆண்டின் கிஸ்தி தொகையில் 5 சதவீதம் உயர்த்தி புதுப்பித்துத் தரப்படும்.
     அந்த வகையில் வரும் 2018-19-ஆம் குத்தகை ஆண்டானது 2018-2021தொகுப்பு ஆண்டின் முதல் குத்தகை ஆண்டு ஆகும்.  
    அதனால் புதுச்சேரி,  காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து கள் மற்றும் சாராயக் கடைகளுக்கு செவ்வாய், புதன்கிழமை ஏலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.   அதன்படி, புதுச்சேரி பகுதியில் மொத்தம் உள்ள 86 சாராயக் கடைகளுக்கும், காரைக்கால் பகுதியில் உள்ள 25 சாராயக் கடைகளுக்கும் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது.  
    இந்த நிலையில், முத்தியால்பேட்டையில் இரண்டு சாராயக் கடைகளை அரசிதழில் வெளியிட்டபடி மூட வேண்டும்,  அக்கடைகளுக்கு ஏலம் விட்டு மீண்டும் திறக்கக் கூடாது என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் கிரண் பேடியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
    இதையடுத்து அந்தக் கடைகளுக்கான ஏலத்தை நிறுத்துமாறு ஆளுநர் கிரண் பேடி கலால்துறை அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பித்தார். அதன்படி, அந்த இரண்டு சாராயக் கடைகளை செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த ஏலப்பட்டியலில் கலால்துறை அதிகாரிகள் சேர்க்கவில்லை.  
    ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தபடி கடைகளுக்கு மட்டும் ஏலம் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai