Enable Javscript for better performance
யோகா தினம் கொண்டாட்டம்: அமைச்சர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச யோகா தினத்தை புதுவையில் கொண்டாடுவது தொடர்பாக சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அதிகாரிகளுடன் சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
     சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.  இதையொட்டி  மாநிலம் முழுவதும் யோகா தினம்  நடைபெறுவதற்கான கூடுதல் ஆலோசனையும் அவர் வழங்கினார்.  
     ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறை,  சுற்றுலாத் துறை,  உயர் கல்வித் துறை,  நலவழித் துறை மற்றும் நகராட்சி உயர் 
    அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai