Enable Javscript for better performance
நிதிநிலை அறிக்கை: அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி:   புதுவை நிதிநிலை அறிக்கை தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் வே.நாராயணசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
      புதுவையில் 2018-19-ஆம் ஆண்டுக்குகான நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.  இதையடுத்து  முதல்வர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கையில் இடம் பெற உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்கான கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடத்தினார்.
    இதில் அமைச்சர்கள் 
    ஆ.நமச்சிவாயம் (பொதுப்பணி),  மல்லாடி கிருஷ்ணாராவ் 
    (சுற்றுலா),  கந்தசாமி (கூட்டுறவு), ஷாஜகான் (போக்குவரத்து),  இரா.கமலக்கண்ணன் (கல்வி மற்றும் வேளாண்துறை),  தலைமைச் செயலர் அஸ்வனி குமார்,  வளர்ச்சி ஆணையர் அன்பரசு,  நிதிச் செயலர் கந்தவேலு மற்றும் செயலர்கள், துறை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai