Enable Javscript for better performance
பிரதமர் மோடியின் காணொலிக் காட்சி உரையாடல்: பேச வாய்ப்பு கிடைக்காததால் விவசாயிகள் வெளிநடப்பு- Dinamani

சுடச்சுட

    

    பிரதமர் மோடியின் காணொலிக் காட்சி உரையாடல்: பேச வாய்ப்பு கிடைக்காததால் விவசாயிகள் வெளிநடப்பு

    By DIN  |   Published on : 21st June 2018 11:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி:   புதுச்சேரியில் பிரதமர் மோடியின் காணொலிக் காட்சி உரையாடலில் பங்கேற்ற விவசாயிகளுக்கு பேச வாய்ப்பு கிடைக்காததால் வெளிநடப்பு செய்தனர்.
    பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன்  காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடிய நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
    புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் கழகத்தில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளிடம் கலந்துரையாடல் நடத்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு விவசாயிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
    இதையடுத்து, வேளாண் அறிவியல் நிலையத்துக்கு காலை 9 மணிக்கு விவசாயிகள் வரத் தொடங்கினர்.
    இருப்பினும், விவசாயிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலே இருந்தது. பிரதமர் மோடி உரை காணொலிக் காட்சி மூலம் ஒளிபரப்பானது. விவசாயிகள் போதிய அளவு வராததால். இருக்கைகள் பல காலியாகவே இருந்தன. இதையடுத்து, வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள், அந்த இருக்கைகளில் பணியாளர்களை அமர வைத்தனர்.
    இந்த நிலையில், விவசாயிகள் தங்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்குமா என்று விரிவாக்கவியல் நிபுணர் குமாரிடம் கேட்டனர். இதையடுத்து, அவர் விவசாயிகள் 5 பேரை தலைமைச் செயலகத்தில் உள்ள நிக் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்குத்தான் பிரதமருடன் பேச வாய்ப்புள்ளது. இங்குள்ளோர் பிரதமர் பேசுவதைப் பார்க்கலாம் என்றார். இதையடுத்து, விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai