Enable Javscript for better performance
முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டுவோம்: பாஜக- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி: மத்திய அரசைக் குறை கூறினால் முதல்வர் நாராயணசாமி செல்லும் இடங்களில் கருப்புக்கொடி காட்டுவோம் என்று பாஜக அறிவித்துள்ளது. 
    இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
     முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து மத்திய அரசு நிதி குறைத்துத் தருவதாக குற்றஞ்சாட்டி வருகிறார்.  50 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தராத ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேலான தொகையை மத்திய பாஜக அரசு தந்துள்ளது.  
    பாஜக தலைவர்களுக்கும்,  தொண்டர்களுக்கும் பதவி பெரிதல்ல,  நாட்டு நலனே பெரிது.  அதை நிரூபிக்கும் வகையில் பாகிஸ்தான் அத்துமீறலை தட்டிக் கேட்காத காஷ்மீர் முதல்வர் மெகபூபாவுக்கு 
    கொடுத்த ஆதரவை பாஜக செவ்வாய்க்கிழமை விலக்கிக்கொண்டது.
     2019-ஆம் ஆண்டில் பாஜகவை தேட வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி கூறுகிறார்.  ஆனால், உண்மையில் ராகுல்,  நாராயணசாமி,  நமச்சிவாயம் ஆகியோருக்கு தான் 2019-ஆம் ஆண்டு தேர்தல் கடைசி தேர்தல் ஆகும். 
    அதற்குப் பிறகு ராகுல் காங்கிரஸை வழி நடத்துவது கேள்விக்குறிதான். நிறைய மாநிலங்களில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகக்கூட இல்லை.
    பாஜகவை குறை கூறும் தகுதி முதல்வர் நாராயண
    சாமிக்கு இல்லை. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 21 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளன. 
    புதுவையில் பாஜக வளர்ந்து வருகிறது. 
    புதுவையில் நிதி நெருக்கடி இருப்பதாக பொய்யாக கூறி வருகின்றனர். 
    நிதி நெருக்கடியில்லை.  ஊழலால் மட்டுமே நிதி நெருக்கடி வரும்.  இனிமேல் முதல்வர் நாராயணசாமி மத்திய அரசைக் குறை கூறினால் அவர் செல்லும் இடங்களுக்குச் சென்று கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என்றார். 
     பேட்டியின்போது துணைத் தலைவர்கள் ஏம்பலம் செல்வம், முதலியார்பேட்டை செல்வம், பொதுச் செயலாளர் தங்க. விக்ரமன், பொருளாளர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai