Enable Javscript for better performance
முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநாடு புதுச்சேரியில் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநாடு புதுச்சேரியில் இன்று தொடக்கம்

    By DIN  |   Published on : 21st June 2018 11:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்,  கலைஞர்கள் சங்க மாநாடு மற்றும் கண்காட்சி புதுச்சேரியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
    4 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் கவிஞர்கள் ஜாவேத் அக்தர், வைரமுத்து, எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், பிரபஞ்சன் உள்பட பல்வேறு படைப்பாளிகள் பங்கேற்கின்றனர்.
    இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலர் சு.வெங்கடேசன் ஆகியோர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
    சாதியற்ற தமிழர்- காவியற்ற தமிழகம் என்ற கருத்துடன் 14-ஆவது மாநில மாநாடு புதுச்சேரியில் 4 நாள்கள் நடைபெறுகிறது.
    தொடக்க நாளான வியாழக்கிழமை காலை (ஜூன் 21) தலைவர்கள்,  
    படைப்பாளிகள் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படும். பாரதி நினைவு இல்லத்திலிருந்து நினைவுச்சுடர் பயணம் தொடக்க விழா நடைபெறும்.
    மாலையில் எழுத்தாளர், கலைஞர்களின் பேரணி நடைபெறுகிறது. ஜெயராம் திருமண நிலையத்தில் மாலை 5 மணிக்கு கீழடி வரலாற்றுக் கண்காட்சியை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி தொடக்கிவைக்கிறார்.
    அந்த வளாகத்தில் தமிழ் சினிமா நூற்றாண்டு கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, புதுவை இளவேனில் புகைப்படக் கண்காட்சி ஆகியவையும் தொடங்குகிறது.
    6 மணிக்கு கலை, இலக்கிய இரவு கடற்கரை காந்தி திடலில் நடைபெறும். பிரளயன் தலைமை வகிக்கிறார்.
    எழுத்தாளர் பிரபஞ்சன்,  திரைப்படக் கலைஞர்கள் லெனின், ரோகிணி,  மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர்  
    பங்கேற்கின்றனர்.
    ஜூன் 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெறும் மாநாட்டில் கவிஞர் ஜாவேத் அக்தர் தொடக்க உரையாற்றுகிறார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
    மாலை 6 மணிக்கு கருத்துரிமை கருத்தரங்கம் கம்பன் கலையரங்கில் பேராசிரியர் அருணன் தலைமையில் நடைபெறுகிறது. பத்திரிகையாளர் 
    "இந்து' ராம் தொடக்க உரையாற்றுகிறார். முதல்வர் வே.நாராயணசாமி வாழ்த்துரை ஆற்றுகிறார். கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் பெருமாள் முருகன் கருத்துரையாற்றுகின்றனர்.
    ஜூன் 23-ஆம் தேதி பிரதிநிதிகள் விவாதமும், ஆளுமைகள் கருத்துரையாடலும் நடைபெறும். மாலை 6 மணிக்கு படைப்புகள் வெளியிடப்படும்.
    குறிப்பாக, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலின் எழுதிய கவிதை, நாள்குறிப்பு எழுத்துகள் ஆகியவை புத்தகமாக வெளியிடப்படுகின்றன.
    இந்த நிகழ்வுகளில் நா.முத்துநிலவன், களப்பிரன், இயக்குநர்கள் கோபி 
    நயினார்,  நவீன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
    மாலை 6.30 மணிக்கு "சிலைக்கு மரணமில்லை-சிந்தனைக்கு வீழ்ச்சியில்லை' என்ற முழக்கத்துடன் பெரியார், அம்பேத்கர், லெனின் சிலைகளை வடிவமைக்கும் பணியில் சிற்பி ஜெயராமன் தலைமையிலான குழுவினர் ஈடுபடுவர்.
    பின்னர், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தலைமையில் கவிதை, பாடல்கள் வாசிக்கப்படும்.
    இந்த நிகழ்வில் கவிஞர்கள் யவனிகா ஸ்ரீராம், வெயில், மனுஷி, உமாமகேஸ்வரி, ஏகாதசி, லட்சுமிகாந்தன், வெண்புறா, அருள், ஆனந்தன், வல்லம் தாஜ்பால், தனிக்கொடி, ஸ்டாலின், சரவணன், தஞ்சை இனியன், சண்முகசுந்தரம், கோவிந்தராசு ஆகியோர் பங்கேற்கின்றனர்.
    ஜூன் 24-ஆம் தேதி சங்கத்தின் புதிய மாநிலக் குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெறும் என்றனர் அவர்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai