Enable Javscript for better performance
வீராம்பட்டினம் முதல் மூர்த்திக்குப்பம் வரை தூண்டில் வளைவு அமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வீராம்பட்டினம் முதல் மூர்த்திக்குப்பம் வரை தூண்டில் வளைவு அமைக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 21st June 2018 11:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி: வீராம்பட்டினம் முதல் மூர்த்திக்குப்பம் வரை தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுவை மாநில பாஜகவின் அரியாங்குப்பம் மாவட்ட செயற்குழுக் கூட்டம் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.  
    மாவட்டத் தலைவர்  சக்தி
    பாலன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார்.  மணவெளி தொகுதித் தலைவர்  லட்சுமிகாந்தன் வரவேற்றார்.
    பாஜக மாநிலத் தலைவர் 
    வி. சாமிநாதன்,  துணைத் தலைவர் செல்வம்,  பொதுச் செயலாளர்கள்  தங்க.விக்ரமன்,  எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
    கூட்டத்தில் வருங்கால திட்டங்கள் குறித்து மாநில துணைத் தலைவர் துரை.கணேசன் பேசினார்.
    தீர்மானங்களை மாவட்ட பொதுச் செயலாளர் தெய்வசிகாமணி வாசித்தார்.
    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில மகளிரணி பொதுச் செயலாளர் ஹேமாமாலினி,  ராமு,  லட்சுமி முருகானந்தம், பாரதி
    மோகன், ஆதிதிராவிடர் பிரிவுத் தலைவர் ஆறுமுகம்,  பொதுச் செயலாளர் ரவி ஆகியோர் பங்கேற்றனர். 
    தீர்மானங்கள்:  கிருமாம்பாக்கம் முதல் கன்னியக்கோயில் - முள்ளோடை வரை கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்படுவதால், புதுவை அரசின் பொதுப்பணித் துறை இந்தச் சாலை நடுவே இரும்புத் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
    எதிர்வரும் மழைக் காலத்தை கருத்தில்கொண்டு விவசாயிகள் நலன் கருதி புதுவையில் உள்ள அனைத்து ஏரி, 
    குளங்கள், கால்வாய்களை தூர்வார வேண்டும். அரியாங்குப்பம் கொம்யூன், நெட்டப்பாக்கம் கொம்யூன், பாகூர் கொம்யூன் சார்ந்த அனைத்து கிராமங்களிலும் உள்ள சாலைகளை சீரமைத்து புதிய சாலைகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால்கள் அமைத்துத் தர வேண்டும்.
    தவளக்குப்பத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு கலை, அறிவியல் கல்லூரியை மேம்படுத்திட தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும்.  வீராம்பட்டினம் முதல் நல்வாடு மூர்த்திக்குப்பம் வரை உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க இந்தப் பகுதியில் தூண்டில் முள் வளைவு அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai