Enable Javscript for better performance
அரசு பாலிடெக்னிக்கில் உணவு பதப்படுத்தும் பாடப் பிரிவை தொடங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அரசு பாலிடெக்னிக்கில் உணவு பதப்படுத்தும் பாடப் பிரிவை தொடங்கக் கோரிக்கை

    By  புதுச்சேரி  |   Published on : 22nd June 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி லாஸ்பேட்டையில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உணவு பதப்படுத்துதல் பாடப் பிரிவை தொடங்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
     லாஸ்பேட்டை தொகுதி பாஜக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தொகுதித் தலைவர் கே.சந்துரு தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார்.
     தீர்மானங்கள்: லாஸ்பேட்டை தொகுதி முழுவதும் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை அரசு உடனடியாக செப்பனிட வேண்டும். பழுதாகியுள்ள மின் கம்பங்களில் விளக்குகளை மாற்ற வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். லாஸ்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உணவு பதப்படுத்துதல் பாடப் பிரிவை தொடங்க வேண்டும். லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் எப்போதும் பணியில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அசோக்நகர் அரசு வீட்டு வசதி வாரியத்தால் அரசு ஊழியர்களுக்கு கட்டி விற்கப்பட்ட வீடுகளுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     பெத்து செட்டிப்பேட்டை, வள்ளலார்நகர், சாந்திநகர், செல்லபெருமாள்பேட்டை ஆகிய ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ள கொல்லிமேடு மைதானத்தை அரசு கையகப்படுத்தி சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். குறிஞ்சிநகர் சிறுவர் பூங்காவில் உடைந்து கிடக்கும் சிறுவர் விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும்.
     ஜீவானந்தபுரத்தில் நகராட்சி மயானம் அருகே கொட்டகை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai