Enable Javscript for better performance
ஏலம் போகாத கள்ளுக் கடைகள் இன்று மறுஏலம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் ஏலம் போகாத கள்ளுக் கடைகள் வெள்ளிக்கிழமை மறு ஏலம் விடப்படுகிறது.
     புதுவை பகுதியில் மொத்தம் 86 சாராயக் கடைகளும், 63 கள்ளுக் கடைகளும் உள்ளன. அதேபோல, காரைக்கால் பகுதியில் 25 சாராயக் கடைகளும், 26 கள்ளுக் கடைகளும் உள்ளன. இந்தக் கடைகள்
     3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுவது வழக்கம்.
     கடையை ஏலம் எடுத்தவர்கள் அடுத்த 2 ஆண்டுக்கு 5 சதவீத கிஸ்தி தொகையை உயர்த்தி கடை உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். உரிமத்தை புதுப்பிக்காத கடைகள் ஆண்டுதோறும் ஏலம் விடப்படும்.
     இந்த நிலையில், புதுச்சேரி பகுதியில் உள்ள 86 சாராயக் கடைகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஏலம் விடப்பட்டன.
     இதில், 28 சாராயக் கடைகள் ஏலம் போயின. அதைத் தொடர்ந்து, புதன்கிழமை புதுச்சேரியில் உள்ள 63 கள்ளுக் கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் எல்லையோர கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது. குறிப்பாக மடுகரை, ஏம்பலம், கரையாம்புத்தூர் உள்ளிட்ட கள்ளுக் கடைகள் எதிர்பார்த்ததைவிட கூடுதல் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டன.
     புதுச்சேரி, காரைக்காலில் ஏலம் போகாத 29 கள்ளுக் கடைகள், 59 சாராயக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை மறு ஏலம் விடப்படுகிறது. காலையில் கள்ளுக் கடைகளுக்கும், மாலையில் சாராயக் கடைகளுக்கும் ஆன்லைனில் ஏலம் நடக்கும் என்று கலால்துறை அறிவித்துள்ளது. இதற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஏலத்தொகையில் 5 சதவீதத்தை கலால்துறை குறைத்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai