Enable Javscript for better performance
ஒன்பதாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் 25-இல் மறு தேர்வு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஒன்பதாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் 25-இல் மறு தேர்வு தொடக்கம்

    By  புதுச்சேரி  |   Published on : 22nd June 2018 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒன்பதாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் 25-ஆம் தேதி மறு தேர்வு தொடங்குகிறது.
     இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 2017-18-ஆம் ஆண்டில் 9-ஆம் வகுப்பில் பயின்று, ஆண்டு இறுதித் தேர்வு எழுதி ஏதேனும் மூன்று பாடங்களில் அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்த புதுவை அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
     மறு தேர்வு எழுத வேண்டிய பாடங்களை தாங்கள் பயின்ற பள்ளியின் முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியரை வெள்ளிக்கிழமை (ஜூன் 22) அணுகி மறு தேர்வு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
     மறு தேர்வானது ஜூன் 25-ஆம் தேதி காலை முதல் மொழி தாள்-1, மாலை முதல் மொழி தாள்-2, 26-ஆம் தேதி காலை ஆங்கிலம் தாள்-1, மாலை ஆங்கிலம் தாள்-2, 27-ஆம் தேதி காலை கணிதம், 28-ஆம் தேதி காலை அறிவியல், 29-ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறும். காலை 10 முதல் 12 மணி வரையும், மாலை 2 முதல் 4 மணி வரையும் தேர்வு நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai