Enable Javscript for better performance
கோப்புகளை தாமதம் இன்றி சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    கோப்புகளை தாமதம் இன்றி சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

    By  புதுச்சேரி,  |   Published on : 22nd June 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோப்புகளை காலதாமதம் இன்றி சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி உத்தரவிட்டார்.
     புதுச்சேரியில் விரைவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதை முன்னிட்டு நலத்துறை அமைச்சர் கந்தசாமி தனது துறை சம்பந்தமாக அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
     இதில் அரசுச் செயலர்கள் சுந்தரவடிவேலு, அலைஸ்வாஸ், பார்த்திபன், துறைத் தலைவர்கள் வல்லவன், சுமிதா, ரகுநாதன், சாரங்கபாணி, யஷ்வந்தையா, துறைமுக செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     இதில் அமைச்சர் கந்தசாமி பேசுகையில், கோப்புகளை காலதாமதம் இல்லாமல் விரைவாக சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு கோப்புக்கும் காலக்கெடு நிர்ணயித்து முடிக்க வேண்டும். துறைத் தலைவர்கள் மத்தியில் வாரம் ஒருமுறையும், துறைச் செயலர்கள் அளவில் 15 நாள்களுக்கு ஒரு முறையும், அமைச்சர் தலைமையில் மாதம் ஒரு முறையும் சீராய்வுக் கூட்டம் நடத்த வேண்டு என்றும் உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai