Enable Javscript for better performance
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

    By புதுச்சேரி,  |   Published on : 22nd June 2018 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று புதுவை பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் தெரிவித்தார்.
    இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது}2017க்கு தகுதியுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மத்திய அரசுக்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 
    தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்சி பள்ளி ஆசிரியர்கள் மட்டும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருது பெற விரும்புவோர் மத்திய மனிதவள அமைச்சகத்தின்  www.nationalawardtoteachers.com என்ற இணையதளத்தில் ஜூன் 30}க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai