Enable Javscript for better performance
நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் பேரவை முற்றுகைப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் பேரவை முற்றுகைப் போராட்டம்

    By  புதுச்சேரி,  |   Published on : 22nd June 2018 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் புதுவை சட்டப்பேரவையை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
     இதைக் கண்டித்து, புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
     புதுச்சேரி கம்பன் கலையரங்கம் அருகே வியாழக்கிழமை காலை திரண்ட அவர்கள், அங்கிருந்து பேரணியாக அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, ஆனந்தம் ரங்கப்பிள்ளை வீதி வழியாக சட்டப்பேரவை நோக்கிச் சென்றனர்.
     ஜென்மராகினி மாதா ஆலயம் அருகே தடுப்புக் கட்டைகளை அமைத்து போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தகணபதி, கண்ணன், விநாயகவேல், முருகன், ராமச்சந்திரன், சீனுவாசன், பத்திரிஸ்தெலாமஸ், கதிரேசன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி கோஷம் எழுப்பினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai