Enable Javscript for better performance
புதுச்சேரியில் மத்திய அமைச்சர் உள்பட 3,000 பேர் பங்கேற்ற யோகா பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் மத்திய அமைச்சர் உள்பட 3,000 பேர் பங்கேற்ற யோகா பயிற்சி

    By  புதுச்சேரி,  |   Published on : 22nd June 2018 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி கடற்கரைச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற யோகா பயிற்சியில் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, புதுவை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி உள்பட 3,000 பேர் பங்கேற்றனர்.
     சர்வதேச யோகா தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் வியாழக்கிழமை சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் மத்திய உணவு பதப்படுத்தல் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
     புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணராவ், இரா. கமலக்கண்ணன், தலைமைச் செயலர்
     அஸ்வனி குமார், காவல் துறை இயக்குநர் சுனில்குமார் கெளதம் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், 3000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
     யோகா பயிற்சிக்குப் பிறகு, முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     யோகா பயிற்சியால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடிகிறது. ஆகையால், அனைவரும் தொடர்ந்து யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புதுவை பள்ளிகளில் உடல்கல்வி ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
     அதேசமயம், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதற்காக யோகா ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் முதல்வர் நாராயணசாமி.
     சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கூறியதாவது:
     புதுவை அரசுப் பள்ளிகளில் தினமும் காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு அரை மணி நேரம் யோகா வகுப்பு நடத்துவதற்கு தேவையான நிதியுதவியை சுற்றுலாத் துறை அளிக்கும். இதற்கான ஒப்புதல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் பெறப்படும். மாணவர்களுக்கான யோகா வகுப்புகள் கல்வித் துறையுடன் இணைந்து, சுற்றுலாத் துறையால் நடத்தப்படும் என்றார் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai