Enable Javscript for better performance
புதுவையில் 15 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன: காவல் துறை இயக்குநர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் 15 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன: காவல் துறை இயக்குநர் தகவல்

    By  புதுச்சேரி,  |   Published on : 22nd June 2018 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் 15 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன என்று மாநில காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சுனில்குமார் கெளதம் தெரிவித்தார்.
     புதுவை போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 7 இடங்களில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சிக்னல்களில் தனியார் உதவியுடன் போக்குவரத்து காவல் உதவி மையம் ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது.
     இந்த மையத்தை வியாழக்கிழமை திறந்து வைத்து டிஜிபி சுனில்குமார் கௌதம் பேசியதாவது:
     புதுவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக 7 இடங்களில் தானியங்கி சிக்னல்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கையால் புதுவையில் 15 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளன. இந்த விபத்துகள் குறைய காரணம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்புதான் என்றார் சுனில்குமார் கெளதம்.
     விழாவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா முன்னிலை வகித்துப் பேசுகையில், புதுச்சேரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக பல்வேறு புகார்கள் வருகின்றன.
     இதுபோன்று புகார்கள் வராமல் ஆட்டோ ஓட்டுநர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
     முன்னதாக, போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் வீர.பாலகிருஷ்ணன் வரவேற்றார். புதுவை காவல் ஐஜி சுரேந்திரகுமார் யாதவ் தலைமை வகித்தார்.
     விழாவில் காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி, ஆய்வாளர்கள் மாறன், தனசேகரன், வரதராஜன், ராஜசேகரன் வல்லெட், காவலர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai