Enable Javscript for better performance
புதுவை பொறியியல் கல்லூரியில் மதிப்பெண் சான்றிதழை வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புதுவை பொறியியல் கல்லூரியில் மதிப்பெண் சான்றிதழை வழங்கக் கோரிக்கை

    By  புதுச்சேரி  |   Published on : 22nd June 2018 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை பொறியியல் கல்லூரியில் 2016 முதல் 2018 வரை பயின்ற மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழை வழங்க வேண்டும் என்று புதுவை மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
     இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பாலா, மாநில உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
     புதுவை பொறியியல் கல்லூரி, 2014-ஆம் ஆண்டு முதல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. ஏற்கெனவே இந்தக் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரியாக உள்ளது. இந்த நிலையில், 2014 முதல் 2018 வரை பொறியியல் படிப்பை முடித்து வெளியேறி உள்ள 4-ஆம் ஆண்டு மாணவர்களின் 5 மற்றும் 6-ஆம் பருவத் தேர்வு (மூன்றாம் ஆண்டு), 7-ஆம் பருவத் தேர்வு (4-ஆம் ஆண்டு) முடிந்தும் அசல் மதிப்பெண் சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை.
     அதேபோல, 8-ஆம் பருவத் தேர்வு முடிந்தும் இதுவரை முடிவு வெளியாகவில்லை.
     தற்போது 4-ஆம் ஆண்டு முடித்து வெளியே சென்ற 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும், இறுதி பருவத் தேர்வு முடிவு வெளியாகாதது மற்றும் பொறியியல் படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாதது காரணத்தால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிட்டுள்ளது.
     அதேபோல, புதுவை பொறியியல் கல்லூரியில் பி.இ., பி.டெக்., போன்ற படிப்பை முடித்து எம்.இ., எம்.டெக்., சேரும் வாய்ப்பும் தற்போது தட்டி பறிக்கப்படுகிறது. எனவே, கடந்த 2016 முதல் 2018 வரை தேர்வு எழுதிய புதுவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் தொடர்ந்து பணியாற்றவும், முதுநிலை பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கவும் தேவையான அசல் மதிப்பெண் சான்றிதழை உடனே வழங்க வேண்டும்.
     அதேபோல, 8-ஆம் பருவத் தேர்வு முடிவையும் வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் பாலா.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai