சுடச்சுட

    

    ரெயின்போ பண்பலையின் 10-ஆம் ஆண்டு விழா: ஆளுநர் கிரண் பேடி பங்கேற்றார்

    By  புதுச்சேரி,  |   Published on : 22nd June 2018 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தின் முதல் அலைவரிசையான ரெயின்போ பண்பலையின் 10-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
     இதில் புதுவை ஆளுநர் கிரண் பேடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்
     புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையம் கடந்த 1967-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இதன் மூலம் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஒரு பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக பயனடைந்து வருகின்றனர்.
     இதன் மற்றொரு அலைவரிசையான 102.8 ரெயின்போ பண்பலை (எப்எம்) ஒலிபரப்பு கடந்த 21.6.2008 முதல் பல்வேறு மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
     புதன்கிழமையுடன் ரெயின்போ பண்பலை தனது 10-ஆவது ஆண்டை நிறைவு செய்தது. இதையொட்டி புதன்கிழமை இரவு புதுச்சேரி வானொலி நிலைய இசை ஒலிபரப்பு கூடத்தில் ரெயின்போ பண்பலையின் 10-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
     வானொலி நிலைய நிகழ்ச்சி பிரிவுத் தலைவர் செல்வம் வரவேற்றார். அப்போது, அவர் புதுச்சேரி வானொலி நிலையம் மக்களுக்கு ஆற்றிவரும் சேவைகளை பட்டியலிட்டார். துணை பொறியியல் இயக்குநர் லீலாவதி தலைமை வகித்து, வானொலி நிலையங்கள் தொழில்நுட்ப வழியாக அடைந்து வரும் வளர்ச்சிகளை குறிப்பிட்டார்.
     சிறப்பு விருந்தினராக ஆளுநர் கிரண் பேடி கலந்து கொண்டு பேசுகையில், சமூக மாற்றத்துக்கு அகில இந்திய வானொலி நிலையங்கள் தொடர்ந்து சேவை ஆற்றி வருகின்றன. இதன் ஒரு அங்கமாக உள்ள புதுச்சேரி ரெயின்போ பண்பலை 10-ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்துகள். தினமும் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பாமல் சமூகத்துக்குத் தேவையானதை மக்களிடமிருந்து கேட்டு, அதற்கு அதிகாரிகளின் பதிலுடன் ஒலிபரப்பு செய்ய வேண்டும். மேலும், மக்களை கவரும் வகையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப வேண்டும் என்றார் கிரண் பேடி.
     வானொலி நிலைய பொறியாளர் பிரிவு உதவி இயக்குநர் இளங்கோவன் நன்றி கூறினார்.
     பின்னர், சர்வதேச யோகா தினத்தையொட்டி, புதுச்சேரி யோகாஞ்சலி நாட்டிய பள்ளியின் யோகாச்சார்யா ஆனந்த பாலயோகி பவனானி பங்கேற்று வானொலி நிலைய பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.
     இதில் செய்திப் பிரிவு தலைமை செய்தியாளர், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai