Enable Javscript for better performance
இருளர் சமூகத்தினருக்கு சான்றிதழ் வழங்க இழுத்தடிப்பு: முதல்வரிடம் புகார்- Dinamani

சுடச்சுட

    

    இருளர் சமூகத்தினருக்கு சான்றிதழ் வழங்க இழுத்தடிப்பு: முதல்வரிடம் புகார்

    By DIN  |   Published on : 23rd June 2018 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இருளர் சமுதாயத்தினருக்கு பழங்குடியினச் சான்றிதழ் வழங்க அதிகாரிகள் இழுத்தடிப்பதாக, முதல்வர் நாராயணசாமியிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.
      புதுவையில் இருளர் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது.  
    இதையடுத்து, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இருளர் பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
    இதனிடையே, பதினோராம் வகுப்பு சேர்வதற்காக அந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் புதுச்சேரி வட்டாட்சியர் அலுவலகம் சென்றுள்ளனர்.  
    ஆனால், துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் என்பவர் பழங்குடியினர் சான்றிதழ் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் பள்ளியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
     பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் பழங்குடியினர் கூட்டமைப்புத் தலைவர் ராம்குமார் கடந்த வாரம் முதல்வர்  நாராயணசாமி,  அமைச்சர் ஷாஜகான் ஆகியோரை சந்தித்து முறையிட்டார். இதையடுத்து பழங்குடிச் சான்றிதழ் வழங்க உத்தரவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். 
    இதனிடையே, மீண்டும் சான்றிதழ் பெற சென்ற மாணவர்களுக்கு வட்டாட்சியர் ரவிச்சந்திரன் பழங்குடிச் சான்றிதழ் தர மறுத்ததாகத் தெரிகிறது. 
     இதற்கு முன் பெறப்பட்ட பழங்குடியினர் சான்றிதழை சில மாணவர்கள் காண்பித்து புதுப்பிக்க வேண்டும் என கூறியபோதும்,  கையெழுத்திட மறுத்ததாகக் கூறப்படுகிறது.  
    இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சட்டப்பேரவையில்  முதல்வர் நாராயணசாமியை வியாழக்கிழமை சந்தித்து மீண்டும் புகார் மனு அளித்துள்ளனர்.  
    மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர்,  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
     வட்டாட்சியர் ரவிச்சந்திரன் இதற்கு முன்பு காரைக்காலில் பணியில் இருந்தபோது சான்றிதழ் கொடுக்க மறுத்ததால், நீதிமன்றம் மூலம் குழு அமைக்கப்பட்டு பழங்குடியினர் சான்றிதழ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai